நவம்பர் 07, 2011

காதலை தொடர தயார் ஆகுங்கள்...


அறிவாளிகள் மற்றும் அனாசியமான திறன் மிக்கவர்களின் மூளை சாதாரண விசயங்களில் சரிவர இயங்குவது இல்லையாம். எழுதுவது என்று என்னும் போதெல்லாம் எதை எழுதுவது என்ற அற்ப கேள்விக்கு என் மூளை திணறித்தான் போகிறது. நானே என்னை அறிவாளி என்று சொல்லவில்லை என்றால் எப்படி? நாமளாவது சொல்லிப்போமே ! இந்த முறை இன்றைய நீயா?நானா? விவாதத்தை மூளை தாண்டவில்லை. தாண்டவே இல்லை.

காதலர்களே இன்றைய எழுத்து உங்களுக்கானது.காதலை காதலனிடமோ / காதலியிடமோ சொல்வது கொஞ்சம் கடினமானது. அதை செய்ய தெரியாதவர்கள் மேலும் தொடர்வதா என முடிவு செய்துகொள்ளவும். மேலும் நீங்கள் காத்திருந்து பெற்றோர் காட்டுபவரை மணக்கவும்.வாழ்த்துக்கள்.

சரி காதலை ஆரம்பித்தாயிற்று , பெற்றோரிடம் சொல்வது எப்படி? அதற்காகவே இந்த பதிவு.உங்களுக்குகான சில பயனுள்ள கருத்துக்கள். சொந்த மற்றும் கேள்வி ஞானம் மூலம் பெறப்பட்டது.

இரண்டு மூன்று மாதத்தில் அல்லது குறுகிய காலத்தில் திருமணம் நடைபெற வேண்டிய கட்டாயத்தில் பேசினால் பலன் எதிர்மறையாகவே இருக்கும். கூடிய மட்டும் பதினெட்டு மாதங்கள் அல்லது அதற்க்கு முன்பாகவே பேச ஆரம்பியுங்கள். குறைவான காலக்கெடு அதிக மன அழுத்தத்தையும் , காதலர்களுக்கு இடையே மனவருத்ததையும் உண்டுபண்ணும். தவறான முடிவுகளுக்கும் வழிவகுக்கும்.

உங்கள் காதல் குறித்து உங்கள் பெற்றோரிடம் பேசும் பொழுது தேவைக்கு ஏற்ப பொய்யை கலந்து கூறவும். அனைத்து உண்மையை கூறுவது "நுணலும் தன் வாயால் கெடும்" என்பதற்கு சமம். பொய்யை கூறும் முன்னர் காதலர்கள் பொய்யை மனனம் செய்து கொள்ளவும்.காதல் தொடங்கியது எப்படி என்பதற்கு பெரும்பாலும் பொய்களை சொல்லவும். உங்களுக்கு உதவி செய்தவர்கள் குறித்து அதில் வராத வண்ணம் பார்த்துகொள்ளவும்.

வீட்டிற்கு வெளிய தோட்டம் அல்லது ஏதேனும் இயற்கை வெளியில் சொல்வதை தேர்ந்து எடுக்கவும். அப்பா அல்லது அம்மா யாரேனும் ஒருவரிடம் மட்டுமே ஆரம்பியுங்கள். இருவரிடமும் என்பது அறவே வேண்டாம். யாரிடம் எதிர்ப்பு அதிகம் வருமோ? அல்லது வரும் என்று எதிர்பார்கின்றீர்களோ அவரிடம் ஆரம்பியுங்கள். எந்த காரணம் கொண்டும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் பேச வேண்டாம்.

சந்தோசமான மனநிலையின் போது பேசவும்." நான் ஒரு பெண்ணை/ ஆணை காதலிக்கிறேன் " என்பதை விட . "இன்னாருடன் என் திருமணத்தை அடுத்த வருடம் வைத்து கொள்ளலாமா? " என்ற வகை அநேக கருத்துக்களை உள்ளடக்கி விடும். "அடுத்த வருடம் நடத்தி வையுங்கள் என்பது வேண்டாம்".இந்த கலந்தாலோசனை ஓரளவு பாதகம் இன்றி செல்லும் பொருட்டு அடுத்து அடுத்து கலந்தாலோசனைகளை தொடரவும்.இல்லை எனில் பதினெட்டு மாதங்களை சரிவர பயன்படுத்தவும்.

தங்க விதிகள் :

இறந்து விடுவதாய் மிரட்டும் பொழுது பதிலுக்கு மிரட்டுவதை தவிர்த்து பேசுவதை தள்ளி போடவும்.

உங்களை விட்டால் யாரிடம் கேட்பேன் என்ற பாசம் தொக்கிய கேள்விகள் அடிக்கடி கேட்கப்பட வேண்டும்.

நீங்கள் தனிமை படுவதாய் உணர்த்தவும்.

நீங்கள் மரணத்தை தழுவுவேன் என்று மிரட்டுவது கடைசி ஆயுதமாக இருக்கட்டும்.வெகு காலமாய் அப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையை கொடுத்து பின்னர் மிரட்டுவது நல்ல முடிவை தரும்.இது உங்கள் கடைசி ஆயுதமே.


கடைசி ஆயுதம் தரும் முடிவை பொருத்து உங்கள் இறுதி முடிவு உங்கள் கையில்.

குறிப்பு:

திருமணம் என்பது காதலை தொடர்வதே. என்னை பொறுத்தவரை காதல் வெற்றி என்பது உங்கள் குழந்தை என் அப்பா அம்மா தான் சிறந்த துணை என்று அவர் தம் இருபதுகளில் சொல்வதுதான். 

அக்டோபர் 24, 2011

திரைபடத்திற்கு பிறகு ...

காலை எட்டு ம‌ணி அள‌வில் க‌திர‌வ‌ன் நாளித‌ழை வாசித்து ,அத‌ன் இணைப்பு புத்தகங்கள் ,கையில் கிடைக்கும் துண்டு சீட்டு என தொடர்ந்தது தான் என வாசிப்பு ஆர்வம்.ஆன்மிக புத்தகம், சுய முன்னேற்ற புத்தகம் என வாசித்து பழகிய எனக்கு சென்னை வந்த பின்புதான் பல்வேறு தளங்கள் மார்க்ஸ், ஏங்கல்ஸ்,மால்கம்,சே என எண்ணற்ற தலைவர்களை அறிமுக படுத்தியது.இறை நம்பிக்கை,நாடு,மனிதன் என அனைத்தின் மீதும் கேள்வியை விதைக்க வைத்தது வாசிப்பு தான்.
சாதி,மதம்,இன‌ம் ம‌ற்றும் மொழி குறித்த கேள்விக‌ள் தொட‌ர்ந்து கொண்டும் அதற்கான பயணம் சீரற்ற இடைவெளியில் நடந்து கொண்டும் இருக்கிறது.எழுத்தார்வம் எப்படி வந்தது என்பதும், காதல்,பணம்,போலி கௌரவம் தாண்டி என்னை எழுது, எழுது என்று சொல்வதும் எப்படி என்பது தான் தெரியவில்லை.

இந்த பதிவிற்கு "திரைபடத்திற்கு பிறகு ..." எனவும் என் பக்கத்திற்கு "வாகை சூட வா" என்று பெயர் வைத்ததிற்கும் காரணம் "வாகை சூட வா" படம்.இதற்கு முன்னர் கிட்டத்தட்ட ஐம்பது பதிவுகள் எழுதிய என்னை இரண்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் எழுத தூண்டிய படம்.ஒரு கிராமத்திற்கு சென்று கல்வி அறிவை பகிர இயலாமல் போனாலும், இணையம் மூலம் தகவல்களை பகிர தூண்டிய படம்.என் பக்கம் ஒரு அதற்க்கு ஒரு சமர்ப்பணம்.

கார்பரேட் உலகில் சமூகம் குறித்து ஏதும் அறியாமல். அறிய விருப்பம் இல்லாமல் பணம் தேடும் பயணத்தில் தன்னையே தொலைத்தவர் பலர்.நான் உணர என‌க்கு கிடைத்த வாய்ப்பு என் எழுத்தின் மூலம் சிலருக்காவது கிட்டும் என்பது எண்ணம்.கார்பரேட் என்று அல்ல அனைவருக்கும் இதில் ஏதேனும் இருக்கும்.

என்னை குறித்து

இய‌ற்பெய‌ரில் எழுத‌ வேண்டாம் என்பதும் என் சுய விவரத்தின் பொருட்டு கருத்தின் தாக்கம் சாயம் பூசப்பட வேண்டாம் என்பதும் புனைப்பெயரில் எழுத ஒரு காரணம். சௌமியா என்பது என் தோழியின் பெயர். அவள் மீது கொண்டுள்ள நட்பின் காரணமாய் அவளுடைய பெயரையே என் புனைபெயராய் கொண்டு எழுதுவது எனவும் முடிவு செய்து எழுதுகிறேன்.
தயாரிப்பு என்றி எந்த பதிவும் எழுத வேண்டாம் என்று முடிவு செய்து இருப்பதால் பதிவிற்கு இடையே இடைவெளி இருக்கலாம். பொறுத்து அருளவும்.

ஆங்கில மற்றும் வட மொழி கலப்பினை தவிர்க்கவும், இலக்கண மற்றும் எழுத்து பிழை தவிர்க்கவும் உங்கள் பங்களிப்பு வரவேற்க படுகிறது.கருத்துகளை பகிர கீழ்கண்ட மின் அஞ்சல் முகவரிக்கு அஞ்சல் அனுப்பலாம்.

sowmya241989@gmail.com